சனி, 17 செப்டம்பர், 2011

துன்பத்திற்கு இடம் கொடேல்

 "எங்கு பெண்கள் மதிக்கபடுகிறர்களோ அங்கு தேவர்கள் சந்தோஷ படுகிறார்கள் -வேதம் "சமத்துவம் என்ற வார்த்தை அதிகம் பயன்ப்படுத்தபட்டாலும் பெண்களை பொறுத்தவரை அது இன்னும் சமைக்கப்படாமலேய உள்ளது சக ஊழியராகவோ, உயிராகவோ கூட சிந்திக்க இடம் கொடுப்பதில்லை வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கணக்கிட முடியாதவை அவற்றில் சில….. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மூலம் ஏற்படும் பாலியல் வக்கிரங்கள் அவற்றில் முக்கியமானது இன்றைய Technology உலகில் Technology முறையற்ற செயலுக்குத்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறதுMobile லில் good morning ,good night போன்ற தகவல்கள் பரிமாறபட்டு கொஞ்சம் கொஞ்சமாக வக்கிரங்களை நுழைத்து வசதியாக பயன்படுத்திக் கொள்வார்கள் இவ்வாறு வாழ்க்கையை தொலைத்த பெண்களின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது ஏதாவது வழியில் பெண்களின் மொபைல் Number தெரிந்து கொண்டு ஆபாச message அனுப்புவது பின்னர் மிரட்டுவது, பணிய வைப்பது இன்னும் எத்தனையோ… இவற்றில் வெளியே தெரிவது ஒரு சதவீதம் கூட இல்லை மாணவ மாணவியர்கள் மத்தியில் கூட இது ஒரு கலாச்சாரமாக பரவி வருகிறது.உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவது இது இன்று சகஜ நிலையாகி விட்டது.எப்படி பெண்களை சுற்றி நடப்பதை பெண்கள் அறிந்தாலும் விட்டில் பூச்சிகளாய் விழுவது நடந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பெண்களுக்கு சமுதாயத்தை பற்றிய புரிதல்தான் ஊனமாக இருக்கிறது போலும்...மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் சில நேரம் ஹார்மோன்கள் நம்மை வழி நடத்துவதும் உண்டு இந்த தூண்டுதலை சரியான முறையில் கையாளுதல் வேண்டும் வாழ்வில் பெண்கள் மிக பெரிய உயரத்தை தொட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதை முன் மாதிரியாக கொண்டு வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்…“பாதகம் செய்பவரைக் கண்டால் பயம்கொள்ளலாகாது….”