திங்கள், 31 டிசம்பர், 2012

ஊரின் ஞாபகங்கள்.....

       வாய்க்காலிலும் குளங்களிலும் தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும் கோடை காலத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கும் குளிப்பது துணி துவைப்பது எல்லாம் குளங்களில் தான் குளிப்பதற்கு போனால் ஊரின் சகல விஷயங்களும் தெரிந்து கொள்ளலாம்.                         
பல காதல்கள் இங்குதான் ஆரம்பித்திருக்கிறது அவை செம்மையாய் வளர்வதற்கு இந்த குளங்களும் வாய்க்கால்களும் ரெம்பவே உதவி இருக்கிறது அனேகமாக எல்லோரும் இங்கு வந்துதான் ஆகவேண்டும் எத்தனை எத்தனையோ நீர் விளையாட்டுகள் இருந்திருக்கின்றன விலையடீருக்கிறோம். குளங்கள் ததும்பி நிற்பதை பார்க்கும் போது மனம் நிறைவாக எதையோ பெற்றது போன்ற நிறைவை தருகிறது. 
கல்குளம் (பாத்திரமங்கலம்)
                       தற்போது ஊருக்கு போனபோது அகண்ட போக்கை கொண்டிருந்த வாய்க்கால்கள் சிறுத்துப்போய் குளங்கள் நீர்வரத்து இன்றி  தாமரை மட்டுமே இவைகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கையும் சுருங்கி விட்டது. குளிக்க கூடிய இடங்கள் கனவுகளை சுமந்து நிற்கிறது எத்தனை  காதல்களுக்கு பிளாட்பாரமாக இருந்தவைகளுக்கு இன்று வெறுமை தான்...குளங்கள் தூர்வாராமல் போனதால் அவை வெறும் குட்டையாகவே மாறிவிட்டன விவசாயமும் இல்லை.......
                                 ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள பரிமாறிக்கொள்ள முன்பு இவை எல்லாம் ஒரு தளமாக  இருந்தது இன்று ...?!

கருத்துகள் இல்லை: