திங்கள், 31 டிசம்பர், 2012

ஊரின் ஞாபகங்கள்.....

       வாய்க்காலிலும் குளங்களிலும் தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும் கோடை காலத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கும் குளிப்பது துணி துவைப்பது எல்லாம் குளங்களில் தான் குளிப்பதற்கு போனால் ஊரின் சகல விஷயங்களும் தெரிந்து கொள்ளலாம்.                         
பல காதல்கள் இங்குதான் ஆரம்பித்திருக்கிறது அவை செம்மையாய் வளர்வதற்கு இந்த குளங்களும் வாய்க்கால்களும் ரெம்பவே உதவி இருக்கிறது அனேகமாக எல்லோரும் இங்கு வந்துதான் ஆகவேண்டும் எத்தனை எத்தனையோ நீர் விளையாட்டுகள் இருந்திருக்கின்றன விலையடீருக்கிறோம். குளங்கள் ததும்பி நிற்பதை பார்க்கும் போது மனம் நிறைவாக எதையோ பெற்றது போன்ற நிறைவை தருகிறது. 
கல்குளம் (பாத்திரமங்கலம்)
                       தற்போது ஊருக்கு போனபோது அகண்ட போக்கை கொண்டிருந்த வாய்க்கால்கள் சிறுத்துப்போய் குளங்கள் நீர்வரத்து இன்றி  தாமரை மட்டுமே இவைகளில் குளிப்பவர்களின் எண்ணிக்கையும் சுருங்கி விட்டது. குளிக்க கூடிய இடங்கள் கனவுகளை சுமந்து நிற்கிறது எத்தனை  காதல்களுக்கு பிளாட்பாரமாக இருந்தவைகளுக்கு இன்று வெறுமை தான்...குளங்கள் தூர்வாராமல் போனதால் அவை வெறும் குட்டையாகவே மாறிவிட்டன விவசாயமும் இல்லை.......
                                 ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள பரிமாறிக்கொள்ள முன்பு இவை எல்லாம் ஒரு தளமாக  இருந்தது இன்று ...?!

சனி, 17 செப்டம்பர், 2011

கற்று கொள்ளலாமே

கோவைலிருந்து isha yoga centre கு சென்றிருந்தேன் Bus இல் conductor bag -ல் சிறிய பாட்டில் ஓன்று வைத்திருந்தார் அதில் தண்ணிர் இருந்தது Ticket கொடுக்கும் போதும் பணம் எண்ணும் போதும் எச்சில் தொடாமல் தண்ணீயே யை பயன்படுத்துகிறார் அவர் பெயர் அ . நடராஜன் Bus -ல் ஜன்னல் வழியே எச்சில் துப்புவது Bus Stand - ல் திறந்த வெளியில் சிறுநீர் களிப்பது ,போன்ற அசுத்த கரமான செயல்கள் ஒரு புறம் இருக்க .எல்லோரும் மாறினால் நான் மாறுகிறோம் என்று சொல்லுபவர்கள் முன் நடராஜன் போன்றோர் உயர்ந்து நிற்கின்றனர்நடிகர்களை பார்த்து முடியையும் நடையையும் மாற்றும் இளைஞர்கள் இது போன்ற நிஜ Hero ளை பார்த்து எதையாவது கற்று கொள்ளலாமே…….

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அநாதை குழந்தையாக வளர்க்கலாமே...

அனாதை ஆசிரமங்களும் முதியோர் இல்லங்களும் காளான் போன்று முளைத்து கொண்டே தான் இருக்கிறது மறுபக்கம் செயற்கை கருத்தரித்தல் மையம் சோதனை குழாய் கூடம் இவையும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெற்று கொள்ள விருப்பமுள்ளவர்கள் அநாதை குழந்தையை எடுத்து தன் குழந்தையாக வளர்க்கலாமே. இப்படி வளர்பதினால் எதோ காரணத்தினால் அநாதை ஆக்கபட்ட குழந்தைகள் அம்மா அப்பாவோடு அன்பாக வாழ்வார்களே இதற்கு நமக்கு தேவை அன்பு மட்டும் தான்........

செவ்வாய், 14 டிசம்பர், 2010

துன்பத்திற்கு இடம் கொடேல்


"எங்கு பெண்கள் மதிக்கபடுகிறர்களோ அங்கு தேவர்கள் சந்தோஷ படுகிறார்கள் -வேதம் "
சமத்துவம் என்ற வார்த்தை அதிகம் பயன்ப்படுத்தபட்டாலும் பெண்களை பொறுத்தவரை அது இன்னும் சமைக்கப்படாமலேய உள்ளது சக ஊழியராகவோ, உயிராகவோ கூட சிந்திக்க இடம் கொடுப்பதில்லை வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கணக்கிட முடியாதவை அவற்றில் சில…..
வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மூலம் ஏற்படும் பாலியல் வக்கிரங்கள் அவற்றில் முக்கியமானது இன்றைய Technology உலகில் Technology முறையற்ற செயலுக்குத்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது
Mobile லில் Good morning ,Good night போன்ற தகவல்கள் பரிமாறபட்டு கொஞ்சம் கொஞ்சமாக வக்கிரங்களை நுழைத்து வசதியாக பயன்படுத்திக் கொள்வார்கள் இவ்வாறு வாழ்க்கையை தொலைத்த பெண்களின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது ஏதாவது வழியில் பெண்களின் மொபைல் Number தெரிந்து கொண்டு ஆபாச message அனுப்புவது பின்னர் மிரட்டுவது, பணிய வைப்பது இன்னும் எத்தனையோ… இவற்றில் வெளியே தெரிவது ஒரு சதவீதம் கூட இல்லை மாணவ மாணவியர்கள் மத்தியில் கூட இது ஒரு கலாச்சாரமாக பரவி வருகிறது.
உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவது இது இன்று சகஜ நிலையாகி விட்டது.
எப்படி பெண்களை சுற்றி நடப்பதை பெண்கள் அறிந்தாலும் விட்டில் பூச்சிகளாய் விழுவது நடந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பெண்களுக்கு சமுதாயத்தை பற்றிய புரிதல்தான் ஊனமாக இருக்கிறது போலும்...
மனிதர்களாக இருக்கும் பட்சத்தில் சில நேரம் ஹார்மோன்கள் நம்மை வழி நடத்துவதும் உண்டு இந்த தூண்டுதலை சரியான முறையில் கையாளுதல் வேண்டும் வாழ்வில் பெண்கள் மிக பெரிய உயரத்தை தொட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதை முன் மாதிரியாக கொண்டு வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்…
“பாதகம் செய்பவரைக் கண்டால் பயம்கொள்ளலாகாது….”